தீய உறவுகள்
நஞ்சு மிதக்கும் நெஞ்சம்
கொண்டு நட்பில் உறவாடும்
நண்பனும் வெறும் மோகம் தேடி
காமக் கண்ணால் மயக்கி
காதல் கொள்ளும் காதலனும்
நச்சு அரவம்போல் ஒதுக்க தக்கவரே
இதை அறிந்தும் அவரோடு உறவாட
வாழ்க்கை தீயில் சாம்பலாகும்
வைக்கோல்போல் அழிந்திடுமே.