இறப்பிலும் உண்டு இன்பம்

மண்மடி மீது
மானுட உறக்கம்
நிம்மதி குலையாத
நிரந்தரத் தூக்கம்.

சுவாசிப்பிலிருந்து
நாசிக்கு விடுதலை
யோசிப்பிலிருந்து
மூளைக்குச் சுதந்திரம்.

வயிறு பசியாத
வாழ்வு இதுதான்
வறுமை தழுவாத
வாழ்வும் இதுதான்.

ஊனம் வியாதி
உடலுக்குத் தொல்லை
உயிர்விட்ட பின்
உபாதைகள் இல்லை.

காதலைத் துடிக்க
இதயமும் வேண்டாம்
காமத்தைத் தணிக்க
இரவுகள் வேண்டாம்.

அன்புக்கு அடிமை
ஆகவும் வேண்டாம்
வம்புக்குத் தினமும்
போகவும் வேண்டாம்.

போட்டியும் பொல்லாத
பொறாமை உணர்வும்
நாட்டிலே உண்டு-சுடு
காட்டிலே உண்டா?

பணத்துக்குத் துரோகம்
பிணங்கள் செய்யாது
பதவிக்கு ஆசையும்
அது கொள்ளாது.

ஆத்திரம் வராது
அவசரம் இராது
சாத்திரம் சுடாது
சாவின் நிழலை.

கல்லறை வாழ்வுக்கு
கலங்காதே மனிதா-அது
இன்னொரு வாழ்வின்
இனிய தொடக்கம்.

பிரைட்

எழுதியவர் : பிரைட் (30-Dec-17, 5:52 pm)
சேர்த்தது : Bright
பார்வை : 411

மேலே