அன்பின் ஆழம்

நமக்காக உயிரையும் பொருட்படுத்தாமல்
நம்மை காக்கும் உறவு..தாய்!
அன்பின் ஆழம்...!!
அனைவரும் கைவிட்ட போது
கைக்கொடுத்து சரியான வழியைக்
காட்டும் உறவு..தந்தை!
அன்பின் ஆழம்...!
எவ்வளவு சண்டையிட்டாலும் நம்மை
விட்டுக்கொடுக்காமல்
பார்த்துக்கொள்ளும் உறவு..சகோதரி!
அன்பின் ஆழம்...!
நம் வருத்தத்தில் இருக்கும் போது தோல்
கொடுத்தும் தோல் சாயவும் உதவிய
உறவு..தோழி!
அன்பின் ஆழம்..!
நம்மை வெறுப்பேற்றி ஆனந்தம்
கொண்டாலும் பிறர் நம்மை அழ
வைக்காமல் பார்த்துக் கொள்ளும்
உறவு..சகோதரன்..!
அன்பின் ஆழம்..!
அன்பு என்ற வட்டம் நாம் வாழும்வரைச்
சுற்றிக் கொண்டே இருக்கும்..!
நாட்கள் வளர..அன்பின் ஆழமானது
நீளும்..!
புரிய வைத்தவர்களுக்கு என்
நன்றிகள்..!!!!
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..!!என்றும் அன்புடன்
மதுமிதா:)

எழுதியவர் : (31-Dec-17, 5:16 pm)
சேர்த்தது : Madhumitha
Tanglish : anbin aazham
பார்வை : 217

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே