முச்சுகண்ணி வாட்டு சப்பு

பாட்டிம்மா எங்க வாட்ஸ்அப்?
😊😊😊😊😊
என்னடி சொல்லறீங்க? வாட்டு சப்பு.
😊😊😊😊😊
ஹைதராபாத்தில படிக்கிற உங்க பேத்தி எங்கன்னுதான் கேட்டோம்.
😊😊😊😊😊
ஏண்டி புள்ளைங்களா எம் பேத்தி பேரு முத்துமணி. அவ எத நெருப்பில வாட்டித் திங்கறான்னு அவள வாட்டு சப்புன்னு கூப்படறீங்க?
😊😊😊😊
அவ எந்த நேரமும் கையில வச்சுட்டு இருக்கிறாளே அது என்ன?
😊😊😊😊😊
ஆமா. கையில ஒரு கையுக்கு அடங்காத செல்லுப்பேசிய வச்சுட்டு என்னவோ பண்ணீட்டு இருக்கறா. அதில என்னக்கூட படம் பிடிச்சு எனக்கு மீசையெல்லாம் வச்சு கிண்டல் பண்ணினா? அவ எதுக்கு எந்த நேரமும் அந்த செல்லுப் பேசியக் கையில வச்சுட்டு இருக்கறா?
😊😊😊😊😊
பாட்டிம்மா அந்த செல்பேசில வாட்ஸ்அப்னு ஒரு செயலி இருக்குது. அதில படங்கள், திரைக் காட்சிகள், கேலி கிண்டல் செய்திகள், மருத்துவ செய்திகள், அரசியல் செய்திகள் எல்லாம் வரும். எங்ககூட படிக்கிற மாணவிகள்ல அதிகமா வாட்ஸ்அப்பை பயன்படுத்தறதே உங்க பேத்திதான். அதனால நாங்க அவள 'வாட்ஸ்அப் முஸ்கன்' கூப்புடுவோம்.
☺😊😊😊😊😊😊😊
வாட்டு சப்பு சரி. அதென்ன முச்சுக்கண்ணு?
😊😊😊😊😊
பாட்டிம்மா உங்க பேத்திக்கு 'முத்துமணி' -ங்கற அவ பேரு பிடிக்கலையாம். அவ பேர 'முஸ்கன்' -ன்னு மாத்திட்டா.
😊😊😊😊😊
என்ன அநியாயம்டி இது. வாட்டு சப்பு பட்டப் பேரு. முத்துமணி பிடிக்கலையாம். முச்சுக்கண்ணியாம். தூ.....என்ன பேருங்டி அது. படிக்கிற பதரா இருக்கறாளே எம் பேத்தி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
(Muskan= smile)

எழுதியவர் : மலர் (31-Dec-17, 8:38 pm)
பார்வை : 336

மேலே