வாழ்க்கையென்பது
வாழ்க்கையென்பது அன்பில் அடங்கியிருக்க,
எதையோ தேடி எங்கெங்கோ அழைகின்றீர்.
வாழ்க்கை முடிவில் வந்து கண்ணீர் சிந்தி ஒப்பாரி.
உங்கள் அழுகை கண்டு நான் சிரிப்பதால் நானொரு அரக்கன் தான்.
மருத்துவ பார்ப்பதாய் எத்தனை நோயாளிகளை ஏமாற்றி பணம் பறித்தாலும்,
அந்த மருத்துவனின் உயிரை அவனால் என்றும் காப்பாற்ற இயலாது.
மதி கொண்டு மாநிலங்களை ஆண்டாலும்,
மரணமாய் வந்து உன்னைத் தழுவுவேனென்று
காலம் வகுத்த விதி.
அதில் யாருக்குமில்லை விலக்கு.
முடிவென்னும் தரிசனம் கிட்டுகையில் ஞானம் பிறக்கிறது.
ஆற்ற வேண்டிய கடமை ஆற்றப்படாமல் உள்ளதே என்று மனம் நோவுகிறது.
கயமை மனதின் ஆணவம் உண்மை உணர மறுக்கிறது..
மரணப் படுக்கையிலும் பணத்தைத் தலையணைக்குள் பதுக்குகிறது.
பணமென்ற காகிதம் கண்டதும் மாறுகிறது மனித குணம்.
அன்பைக் கதைகளில் மட்டுமே காண இயலுகிறது..
சூழ்ச்சியும், தந்திரமும் குறுக்குப் புத்தியின் வழியிலோட செல்வச் சேர்ப்பிலே அகந்தையின் தாண்டவம் ஆடும் உலகமே நரகத்திற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஆதிக்கமென்றும், அதிகாரமென்றும் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில் அனைத்து மக்களும் பணத்திற்கு விலை போகும் தலையாட்டிப் பொம்மைகள்..