அவளின் நினைவுகள்

நான் அவளை
வானமாக பார்த்தேன்
அவள் என்மீது காதல்மழை பெய்தப்போது...

நான் அவளை
காற்றாக உணர்ந்தேன்
அவள் என்மீது காதல் தென்றல்
வீசியப்போது...

நான் அவளை
பூமியாக பார்த்தேன்
அவள் என் காதலை பூப்போல
தாங்கியப்போது...

நான் அவளை
நீராக பார்த்தேன்
அவள் ஓடையாக மாறி
என் காதல் நினைவுகளை
சுமந்து சென்றப்போது...

நான் அவளை
தீயாக பார்த்தேன்
என் இதயத்தில் காதல் தீபம்
ஏற்றியப்போது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (2-Jan-18, 11:36 am)
Tanglish : avalin ninaivukal
பார்வை : 454

மேலே