செம்மலரே

செம்மலரே என் மலரே
மனம் காற்றில் பரவுது மானே

உன் இதழ் பார்த்து சில வண்டுகளும்
இங்கு மூர்ச்சை ஆகுது தேனே

தெளி மாரித் தூவும் வானம்
நீ நனைந்திட கன்னீர் சிந்தும்

சீரொளி பரப்பிடும் அகிலும்
நீ மலர்ந்திட ஔியை வீசும்

முழுமதி நிலவும் இரவில்
சிறு வெட்கம் தாேய்க்கும் உன்னால்

இரவினில் பூத்திடும் அல்லி
உனை பார்த்த பின் சோர்ந்தடி

முள்ளிலே கடும் முள்ளிலே ஒரு ரோஜா பூப்பது போல்
சேரிலே செஞ்சேரிலே செந்தாமரை மலர்வது போல்

இந்த மெல்லிய நெஞ்சில் ஏனோ
ஒரு காதல் பூத்தது தேனே

வான் வரும் சிறு மழை துளியும் இம்மண்ணில் சேர்ந்திடும் பெண்ணே

அது சேர்ந்த பின் புவியின் ஜீவன் புத்துயிராய் தளிர்க்குதடி

நான் உன்னைச் சேர எண்ணி
தினம் நித்திரை மறந்தேன் மானே

என் விழிநீர் புவியில் விழுந்து
புவி ஜீவன் கலங்கியதே

காற்றிலே வீசும் காற்றிலே மலர் மணமும் கரைவது பாேல்

மேகத்தில் வெண்மேகத்தில் கடல் நீரும் உறைவது போல்

நீ என்னில் தஞ்சம் ஆகு
மலர் பூவே கொஞ்சம் தாக்கு

எழுதியவர் : ஹேம் (2-Jan-18, 10:35 pm)
சேர்த்தது : Abdul Hameed
பார்வை : 89

மேலே