காதலோடு

நித்தம் என்
நித்திரையின்
நிசப்தமதை கிழித்தெரிந்து
கனவின் மீதேற்றி
கடல் தாண்டி
காதல் செய்வாய்
விழியின் பார்வையில்
விடையறியா வினாவினை
விடுமுறையின்றி
விடாமல் ஏவி கடப்பாய்
உலகில் உலவும்
அத்தனை மொழிகளுக்கும்
விடுப்பளித்து
மௌனம் கொண்டே
எனை கதற வைப்பாய்
ஆடைகள் அழகா
நீ அழகா
என பட்டிமன்றம் நடத்தும்படி
அடிக்கடி கண் எதிரே
நடை பயில்வாய்
ஒப்பனை இன்றியும்
ஒவ்வொரு நாளும்
தேவதை போலே
வலம் வருவாய்
அழகால் வதங்கள்
செய்த பொழுதும்
புன்னகை ஏவி
புலம்ப வைப்பாய்
ஆயிரம் கடமைகள்
அணிவகுந்திருந்தும்
முந்தி கொண்டு
உன் முகம் பதிப்பாய்
ஆயிரம் முகங்கள்
தினம் கடந்தும்
அட்டை படம் போல்
மனம்புகுவாய்
எத்தனை வித்தை
மொத்தமாய்
காட்டுவாய்
எத்தனை முறைகள்
கொன்று குவிப்பாய்
எத்தனை சோகம்
நித்தமும்
ஊட்டுவாய்
எத்தனை ஏக்கம்
எண்ணிக்கை கூட்டுவாய்
எத்தனை கனவுகள்
இதயத்தில் மாட்டுவாய்
எத்தனை எத்தனை
எப்படி எப்படி
மாற்றங்கள் நேரினும்
உனக்காய் உனக்காய்
காத்து கிடப்பேன்
காத்து கிடப்பேன்
காதலோடு
காதலோடு
காதலோடு