எழுப்பி விடாதே

கப்பியில்
கண்ணயர்ந்திருக்கும்
கயிறு
கர கர என்ற காணத்தோடு
கரள் பிடித்த வாளியை
கிணற்றுக்குள்
இறக்கும்போது
சொல்லுமாம்....
"நித்திரை செய்யும்
நீர்க் குழந்தைகளை
எழுப்பி விடாதே..!"

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:08 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
பார்வை : 70

மேலே