நான் பொய்யன்

என் இரத்தம் குடிக்கும்
பெண் நுளம்புகளே...
வாய் திறந்து பேசி
விடாதீர்கள்
பொய்களைத் தவிர
வேறெதுவும் வராது
ஏனென்றால்,
நான் கவிஞன்
பார்த்தீர்களா..?
இப்போது சொன்னதும்
பொய்தான் !

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:13 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
பார்வை : 145

மேலே