நான் பல்பு வாங்கிய கதை

நான் பல்பு வாங்கிய கதை
"""""""""""""""""""""""""""""""""""""'‘'"""'"""

இது நடந்தது போன வருஷம்.. ஆனாலும் என்ன.. சொல்ல வந்தத சொல்லுங்கறீங்களா.. உங்க ஆர்வம் புரியுது.. நான் பல்பு வாங்கனதப் படிக்க அவ்வளவு ஆசை.. ம்.. சொல்றேன் சொல்றேன்..

இன்னும் பத்து நாள்ல கிருஷ்மஸ் வருது.. உடனே ஸ்டார் கட்டனும்னு வீட்ல சொன்னாங்க.. அட.. ஆமாலனு யோசிச்சு.. போன வருஷத்துல புது வரவா இருந்து.. இப்ப செல்ப்ல அழுக்கா இருந்த.. ஸ்டார எடுத்து அழகா தொடச்சு, ஒரு சேர கஷ்டப்படுத்தி மேல ஏறி, ஸ்டார கட்டிட்டு, வயர இழுத்துட்டுப் போயி பிளக்குல மாட்டி சுவிச்சப் போட்டா....
பல்பு எரியல...அப்பறமென்ன.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி பல்பு வாங்கப்போனேன்....

(நான் பல்பு வாங்கிய கதையப் படிக்க வந்து.. இப்பிடி பல்பு வாங்கீட்டீங்களே மக்கா... ஹா.. ஹா.. ஹா..)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (4-Jan-18, 7:18 pm)
பார்வை : 1512

மேலே