தமிழே நீ வாழ்க
பத்து திங்க்கள் சுமப்பவள் போல்
பத்துபாட்டை கொண்டவளே நீ வாழ்க!
நவரத்தினம் அணியும் ந ங்கை போல்
நவமணியை தந்தவளே நீ வாழ்க!
எட்டுத்திக்கும் அறிந்தவள் போல்
எட்டுத்தொகையை கொண்டாயே நீ வாழ்க!
ஏழுவகை பருவ மாதரை போல்
ஏழுசுவரங்களை ஏந்தி வந்தவளே நீ வாழ்க!
அறுசுவை அமுது படைப்பவள் போல்
அறுகாண்ட இராமாயணம் பாடியவளே நீ வாழ்க!
ஐயத்தை நீக்கும் என் ஆசான் போல்
ஐங்குறுநூற்றை தொகுத்தவளே நீ வாழ்க!
நான்கும் எடுத்துரைத்து நல்லது சொல்ல
நாலடி நவின்றவளே நீ வாழ்க!
முவ்வேளை பசிநீக்க சமைக்கும் மடந்தை போல்
முப்பாலில் உலகை வைத்தவளே நீ வாழ்க!
இரட்டைரோஜா சூடிய இளவரசி போல்
இரட்டைக்காப்பியம் கொடுத்தவள் நீ வாழ்க!
ஒன்றை செய்தலும் நன்றையே செய்பவளாக
ஒருவாசகமான திருவாசகத்தை தாக்கியவளே நீ வாழ்க!
சுழியத்தை கண்டறிந்த தமிழனுக்கே
உரிய தங்க தாமரையே!
என் உணர்வை வெளிக்கொணர உதவும்
உத்தமியே நீ வாழ்க!