உலக பொதுமொழி

புன்னகை...!
உலகத்தின் பொதுமொழி
காதலின் புதுமொழி
உதடுகள்
புன்னகையின் பிறப்பிடம்
புன்னகையின் சமாதி...

புன்னகை...!
ஆயிரம் அர்தங்கள் சுமந்து
வெளிவருகிறது
தாயின் புன்னகையில்
அன்பும் அரவணைப்பும்
குழந்தையின் புன்னகையில்
வெகுளியும் நிறை வயிறும்
குமரியின் புன்னகையில்
காதலும் பாசமும்
மாணவனின் புன்னகையில்
ஒழுக்கமும் அடக்கமும்
ஏழையின் புன்னகையில்
நிறைவும் நிம்மதியும்
அரசியல்வாதியின் புன்னகையில்
கொடுக்கலும் வாங்கலும்
ஆண்டவனின் புன்னகையில்
அருளும் ஆசியும்...

புன்னகை...!
மனிதனுக்கு இறைவன்
கொடுத்த வரம்
பொன் நகை அணிந்த
மங்கையிரிடம் புன்னகை
இல்லையேல் பொன் நகை வீண்...

புன்னகை...!
நோய் தீர்க்கும் மருந்து
விருந்தோம்பலுக்கே விருந்து
பகை நீக்கி உறவை நோக்கி
பயணிக்கும் பாச பேருந்து...

புன்னகை...!
புயலில் வீசும் தென்றல்
கோடையில் கிடைத்த நிழல்
மழையில் கிடைத்த குடை
இருளில் கிடைத்த ஒளி
சிக்கலில் கிடைத்த அடைக்கலம்...

புன்னகை...!
உலக சமாதானம்
கோபத்தின் மருந்து
மன்னிப்பின் மறு உருவம்
வாழ்க்கையின் பிடிப்பு
வசந்தத்தின் வாசல்
காதலின் துவக்கம்...

புன்னகை... !
ஆயுளை நீட்டிக்கும்
வல்லமை படைத்த
உலக பொதுமொழி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (5-Jan-18, 9:20 am)
பார்வை : 281

மேலே