நெருப்பு மனிதர்கள்

நெருப்பு மனிதர்கள்

நெறிஞ்சி முள் மீது உறங்கும்
இந்த
நெருப்பு மனிதர்கள்...
நிலக்கரியானது
எப்படி?

இவர்களில் முளைத்த
வைர வரிகளை
பறித்தது யார்?

இவர்கள் மீது விழும்
சூரியக் கதிர்கள்
மட்டும்
கறுத்தது ஏன்?

வற்றிய கன்னங்களில்
மீசை மட்டும்
வற்றாதது ஏன்?

எந்த
இமயமலை
சரிவுகளிலும்
குகைகளிலும்
தேகத்தை
குறுக்காத
இவர்களின்
தேகம் கறுத்து
தேக்கு ஆனதேன்?

இவர்கள் மட்டும்
கும்மிருட்டிலும்
ஒளி
உமிழ்வது
எங்ஙனம்?

தெறிக்காத பார்வையில்
உள்ள
ஆயிரமாயிரம்
கேள்விக் கணைகளுக்கு
விடை கூறுவார்களா
நவீன
பிதாமகர்கள்?

சம்மட்டிகளை
சரளமாக
வீசியே
சம்மட்டியானது
இவர்களுக்கு
மட்டும்
எப்படி சாத்தியமானது?

நிழலுக்கு நிழல்
தருவதில்லை!
நெருப்பை நெருப்பு
அணைப்பதில்லை!
நீருக்கு நீர்
சொந்தமாதில்லை!

உழைப்பால்
கறுத்த
இந்த
மண்ணின்
மைந்தர்களை
பூமி
கைவிடுவதில்லை!

ஏனெனில்
நிறப்பிரிகை அறியாதவள்
பூமித்தாய் மட்டுமே.

இவர்கள்
கறுக்காவிட்டால்
கறுகும்
மனித இனம்!

இவர்களை
கட்டியணைக்காவிட்டாலும்
ஈர மழைத்துளிகளைப்
பொழிவோம்...
இன்னமும்
உலவும்
இந்த
மகாத்மாக்கள்
மீது.

- சாமி எழிலலன்
05 01 2018

எழுதியவர் : சாமி எழிலன் (5-Jan-18, 3:57 pm)
Tanglish : neruppu manithargal
பார்வை : 169

மேலே