ஏன் இப்படிச் செய்கிறாய்

திரைப்படத்தில்
கதாநாயகியின் முகத்தை
நீ வந்து ஏன்
மறைக்கிறாய் ?

நான் தீட்டும் ஓவியத்தில்
உன் வாசனையை ஏன்
தூவிவிடுகிறாய் ?

எனது புத்தகத்தில்
உன் பார்வைகளை
ஏன்
அச்சுக் கோர்க்கிறாய் ?

எனது நடனத்தில்
உனது புன்னகையை
ஏன்
நடக்கவிடுகிறாய் ?

என் எண்ணங்களின் மேல்
நீ வந்து எதற்குப்
பாய் விரிக்கிறாய் ?

எனது நிழல் மீது
நீ வந்து
ஏன்
வண்ணமடிக்கிறாய் ?

எனது நாசியில்
நீ எதற்கு
உலா போகிறாய் ?

நில் நில்
பதில் கொடுத்துப் போ
என் கேள்விகளில் ஏன்
ஒளிந்துகொள்கிறாய் ?

*****

எழுதியவர் : நவீன் இளையா (5-Jan-18, 10:04 pm)
பார்வை : 49

மேலே