ஆங்கில புத்தாண்டு
நடுநிசி நிசப்தமும்
இறைச்சலாகும் உன்னை
வரவேற்க........
பிறப்பறியா குழந்தைகள் பல
இப்பூலகில் ஆனால்
அகிலமே ஆர்ப்பரிக்கும் உன்
பிறந்த நாளை....
அவனவன் பிறந்த நாளில் உணருகிறானோ இல்லையோ உன்
பிறந்தநாளில் உணருவான் அவனது ஒரு வயது முதிர்ச்சியை.....
இனம் மொழி பண்பாடு கலாச்சார
பேதமில்லாமல் அனைவரையும்
ஆட்டுவிக்கும் ஆங்கில புத்தாண்டே
உன்னை மகிழ்வோடு வரவேற்கிறேன்..ஆனால் நீயும்
இடையூறு இல்லாத இறுதி திங்களோடு இறப்பேன் என்று
உறுதியளிப்பாயாக........