தெரியாது என்றும் பகல் நிலவு

உன் விழிகள் என் எழுத்துக்களை பார்க்குமா தெரியாது.
என் கவிதைகள் உனை சேருமோ தெரியாது..
உன் பெயர் சொல்லி துடித்திடும் என் உயிர் துடிப்பை நீ அறிவாயோ தெரியாது..
எந்தன் காதல் என்ன என்று உனக்கு என்றும் தெரியாது..
உன் விழியில் விழுந்து நான் கவி பாடிடும் பறவையானதும் உனக்கு தெரியாது..
என் இறக்கைகள் உனக்காக மட்டுமே உயர பறந்திடும் என்பதும் உனக்கு தெரியாது...
தெரியாமலே இருந்திடும் உனக்கு நான் உதிர்த்திடும் தெரியாத பிறந்த நாள் வாழ்த்துக்கள்...