முதல் காதல்

நான் சொல்ல நினைக்கும்
வார்த்தை அது-அதை
கேட்க நினைக்கும் மனசு எது
வெட்ட வெளியிலும் உள்ளம் குளிரும்
என்னை சுற்றி உன்னை தேடும்போது
உச்சி மண்டையும் உள்ளங்காளும்
ஒட்டி இருப்பதே மறந்து போகும்
உன்னை மனதில் நிருந்தும் போது

கண்கள் இரன்டும் மூடி இருக்க
கண்ணுக்குள்ளே நீயும் இருக்க
கால்கள் இரண்டும் பாதை மாறும்
உன் சிரிப்பொலி ஒசை கேட்க
காதுகள் இரண்டும் காத்துக்கிடக்கும்

நிமிடம் மூன்று முறை
உன்னை நினைப்பேன்
மூன்றாம் முறை
விண்ணில் பறப்பேன்

பாரதியின் காதலை பாட்டில் கேட்டேன்-உந்தன் காதலை
எந்தன் நெஞ்சில் உணர்ந்தேன்
கருவிழி இரண்டும் கரைகடந்து
காதலி முகத்தை தேடுகிறது

கருணை நிறைந்த நெஞ்சமது-நீ
நலமாய் என் மனதின் உருவமாய்
என் முன் வருவாய் என சொல்கிறது

எழுதியவர் : அஸ்வந்த் (6-Jan-18, 9:00 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 198

மேலே