பயணம்---------------ஊர் சுற்றிப் புராணம்
பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.
நம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி - கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.
உங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் என பயணமும் பயணம் சார்ந்த குறிப்புகளை - அனுபவங்களை எழுதவும்