மழைத்துளி

முதன் முதலில்
நீ என்னை
தழுவியபோது
நான் அனுபவித்த
இன்பத்திற்கு
எல்லையே இல்லை
அது ஆனந்தமழை...

துளி துளியாய்
தனித்தனியாய் விழுந்து
எல்லாம் ஒன்றாக கலந்து
ஊர்வலமாக ஒருவித
இசையுடன் போகும்போது
ஒற்றுமைக்கு உவமை
உன்னை விட வேறெதுவும் இருக்கமுடியாது...

கூட்டுக்குடும்பம்
தனிக்குடித்தனம்
என பிரச்சனை இல்லாமல்
பிரிவுகளை செய்து வாழ்கிறாய்
சூழலுக்கேற்ப உன்னை மாற்றிக்கொள்கிறாய் நீ உயர்ந்துப்போகாமலே உயரந்து வாழ்கிறாய் எங்கு கற்றாய்
இந்த வித்தைகளை...





.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Jan-18, 9:40 am)
Tanglish : mazhaithuli
பார்வை : 1094

மேலே