சேவை மனப்பான்மை எங்கே
![](https://eluthu.com/images/loading.gif)
அடிச்சு பிடிச்சு அஞ்சு ரூபா,
பிடிச்சு மடிச்சு பத்து ரூபா,
நாளும் ஓடி ஓடி உழைச்சு தானே பார்க்கிறோம் செல்வம் தேடி.
வரவுக்கு மேலே செலவு,
அத்தியாவசியக் கல்விக்கு வட்டிக்குக் கடன் வாங்கிக்க பழகு,
கடன் வாங்கி கழித்தாலாய், கடன் வாங்கி படிச்சாலும்
வேலை கிடைக்கல.
ஏன் கிடைக்கல?
கொள்ளைக்காரனுங்க எதிர்பார்க்குற தரம் நம்மக் கிட்ட இல்ல...
பணம் அதிகாரம் செய்யும் உலகத்துல சிக்கல்களுக்கென்றும் பஞ்சமில்ல.
ஏழை மக்களுக்கும் மதிப்பில்ல.
இல்லாதவன் வேலைநிறுத்தப் போராட்டம் செய்ய முடியுமா?
எல்லாம் இருப்பவனே செய்கிறான்.
மேலும் கையில் சிக்குவதைச் சுருட்ட நினைக்கிறான்.
இல்லாதவனுக்கோ ஒரு பாட்டில் விஷம் வாங்கக்கூட பணமில்ல..
ஆயிரம் மடங்கு கவனமாக உழைத்தாலும், பத்தாயிரம் குறைகளைச் சொல்லித் திரிகிறான் முதலாளியென்ற பெருச்சாளி.
அட! இந்த பெருச்சாளிகளுக்கு கோபமெல்லாம் வருதே!
சேவையால் உயர்ந்த தலைவர்கள் இருந்த இடங்களில் ஆடம்பர தேவையால் உயர்ந்த பெருச்சாளிகள் இருப்பதாலே,
அரசாங்கமே சாக்கடை தான்...
சாக்கடையை சுத்தப்படுத்த இங்கு சேவை மனப்பான்மை கொண்ட ஊழியர்களுக்கு பஞ்சம்.
இறைவா! இதைச் சுத்தம் செய்ய எங்களுக்கு அருள்வாய் கொஞ்சம்...