என்னால் அவள் நிலை

பதியவைத்தேன் உன் கன்னத்தில் முத்தத்தை.
பதறாமல் ஏற்றுக் கொண்டாய் அதன் சத்தத்தை.
முத்தமிட்டக் கன்னத்தில் மலர்ந்தது மோகங்கள். - உன்
மனதிற்குள் பிறந்தது புது ராகங்கள். - நீ
தணலில் இட்ட தங்கம் போல் - பருவ
மெருகேறி உனக்குள் உன்னை உயர்த்திக் கொண்டாய்.-அதில்
என்னையும் நினைத்துக் கொண்டாய்.
நெருப்பாய் சீண்டியவன் வந்தான் - பக்கத்தில்
நெருங்கி வந்து இன்ப அதிர்வைத்தந்தான்.
கேளாமல் கன்னத்தில் உதட்டினைப் பதித்தான்.
தனித்தே தவித்தவள் முன் குதித்தான்.- என்னைத்
தொட்டவனே ! - உன்னை தொடவும் என்னிடம்
முத்தத்தால் அனுமதிக் கேட்டாயோ.? - நீ
முத்தமிட்ட இடம் கன்னம் அல்ல - என்
மனதையும் அல்லவா இணைந்தே முத்தமிட்டாய்.
உனக்காக இனி நான் வாழ்வதா? - இல்லை
எனக்காக என்னையே உன்னிடம் தருவதா?
உன்னால் இந்த நிலை நான் கண்டேன்.- இன்று
என்னால் என்னையே காணாமல் நின்றேன்.

எழுதியவர் : சங்கு chandramoulee (11-Jan-18, 5:33 am)
Tanglish : ennaal aval nilai
பார்வை : 103

மேலே