வேண்டுகிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் ஏகாந்த பார்வை என் மேல் விழுந்திட வேண்டும்...
உன் உணர்வில் என் உணர்வு கலந்திட வேண்டும்...
உன் விரலோடு என் விரல் கோர்த்திட வேண்டும்...
உன் தோல் மேல் என் தலை சாய்திட வேண்டும்...
உன் மார்பில் என் முகம் பதித்திட வேண்டும்...
என் உயிர் ஓட்டம் உன்னில் நான் கண்டிட வேண்டும்...
என் மூச்சு உன் மூச்சில் கலந்திட வேண்டும்...
உன் விழியில் என் பிம்பம் நான் கண்டிட வேண்டும்...
உன்னில் நான் கரைந்திட வேண்டும்....
உன் மடியில் நான் துயில் கொள்ள வேண்டும்...
அந்த நொடி என் ஆயுள் முடிந்திட
வேண்டும்....