இதோ பார் அதிசயம்

அதிசயம்! அதிசயம்!
அதோ பார் அதிசயம்!

அறிவுமிகு மனிதர்களுக்கிடையே அன்பைக் காண்பது அதிசயம்!

பணத்தால் பித்து பிடித்த மனிதர்களிடையே பாசம் காண்பது அதிசயம்!

அதிசயம்! அதிசயம்!
அதோ பார் அதிசயம்!

அழகில் மயங்கி காமம் சொட்ட கவிபாடும் கவிஞர்களிடையே காதல் காண்பதே அதிசயம்!

கவிதைகள் மட்டுமா?
ஓவியங்களில், காவியங்களில் நல்நெறி காண்பதும் அதிசயம்!

அதிசயம்! அதிசயம்!
அதோ பார் அதிசயம்!

கற்றோர் சபைதனில் பிறரை மதிப்போர் காண்பது அதிசயம்!

பெற்றோர் சபைதனில் பிறருக்கு கொடுப்போர் காண்பது அதிசயம்!

அதிசயம்! அதிசயம்!
அதோ பார் அதிசயம்!

நிலுவையில்லா தீர்ப்பு சொல்லும் நீதிபதி காண்பது அதிசயம்!

தன்னில் நிறைபெற்ற மனிதர் காண்பது அதிசயம்!

அதிசயம்! அதிசயம்!
அதோ பார் அதிசயம்!

நபி வழி வாழும் முஸ்லீம் காண்பது அதிசயம்!

இயேசுவைப் பின்தொடரும் கிறிஸ்துவர் காண்பது அதிசயம்!

பகவத் கீதை வழி வாழ்க்கை கீதம் இயற்றும் இந்து காண்பது அதிசயம்!

புத்தன் வழி புத்தி செல்லும் பௌத்தன் காண்பது அதிசயம்!

வள்ளலார் வழி வாழ்ந்து காட்டும் சுத்த சன் மார்க்கனைக் காண்பது அதிசயம்!

அதிசயம்! அதிசயம்!
அதோ பார் அதிசயம்!

அகிம்சை வழி வாழ்ந்து அருள் பெறுவதே அதிசயம்!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Jan-18, 8:00 pm)
Tanglish : itho paar athisayam
பார்வை : 577

மேலே