வலசைப் போதல்

வெண் மேகக் காகித வானிலே
விளங்கு உடைத்த பறவையாக
எண்ணச் சிறகை விரித்து
வலசை போகிறேன்...!
எந்தன் இணைத் தேடி அல்ல
கவிக்கோர் வருணனைத் தேடியே..!
ஊன் உறக்கத் தொலைத்தே பறக்கிறேன்
இறகு வலித்தாலும் சரியென..!
நாட்கள் கடந்து போகையில்
கவல் கொள்ளா உள்ளம் கொண்டே
விரிந்த வானில் பார்க்கிறேன்..!