காளை மனசு

ஒத்தாப்பு வீட்டுக்குள்ள
ஒருக்களிச்சி நீயிருந்த உன்
மத்தாப்பு உடம்புகண்டு
மனசெல்லாம் குலைஞ்சதடி

சுட்டாலும் கறுக்காத
செஞ்சிவப்பா இருக்கும்புள்ள
குட்டான் உதட்டாலொரு
குறுஞ்சிரிப்பு சிரித்தாலென்ன?

கட்டுக்கு அடங்காத
காளையா என்மனசு உன்
தக்காளி முகம்காண
தறிகெட்டு அலையுதடி

கடல்ல மீன்வத்திக்
கருவாடா ஆனாலும்
உடல்ல இருக்குமுன்ன
ஒருநாளும் பிரிக்கேலாடி

திண்டாத் தெவிட்டாத
தேன்குழலைப் போலபுள்ள
மன்றாடிக் கேக்கிரேன் உன்
மனமிரங்க மாட்டாதா ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (16-Jan-18, 2:41 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 63

மேலே