இராப்பத்து பதிகம் - பதிகம் 5
பதிகம் 5
கற்பிதங்கள் மீறும் மனம்
குளிர்காயத் துடிக்கும் உடல்.
வேட்கையின் மொழி
விழிகளில் ; நடையில்
சமிக்ஞைகள் , சைகைகள்
சொற்களைப் புறந்தள்ளும்
சொற்களின் தேவை
கொஞ்சமே கொஞ்சம்.
கொஞ்சும் சொற்களும்
நினைத்துப் பார்க்கையில்
சிரிப்பை வரவழைக்கிறது
எல்லாம் அதற்குத் தானே.
நேரடி , உடனடி என்பது
தோல்வியில் முடியலாம்.
மாய , மௌன
மயக்க , தயக்க சுற்றுகள்
அந்தப் புள்ளியில் முடியும் வாய்ப்பு.