ஏ மனிதா
உன்னில் உள்ள சக்தியை நீ அறிவாய்
அதனை முழுமையாக பயன் செய்
மற்ற உயர்களை மிதித்து நடவாதே
அவ்வுயிர்களை மதித்து நட
மற்றவர் மேல் குற்றம் காணாதே!
உன் குறைகளை முதலில் நிவர்த்தி செய்
மற்றவர்களை சுரண்டி வாழாதே!
உன்னில் உள்ள திறமையை நம்பி வாழ்
அதிகம் பேசி நேரத்தை விரயம் செய்யாதே!
அந்த நேரத்தை பயன் உள்ள உன் செயலில் காட்டு
பணமும் புகழும் பதவியும் வந்தால்
அவை தீய கர்மாக்களை சேர்க்க உதவும்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மனம் !
****