மகனதிகாரம்
மகனுக்கு ஒரு வயது பூர்த்தியடைந்திருந்தது.
அவனுக்கு நாய் ரொம்ப பரிச்சயம் போல,
கண்ணுக்கு எட்டாத தொலைவில் கூட நமக்கு முன் இனம் கண்டு கொள்கிறான்.
நாயை போன்றே ஆட்டையும் நாயென்றே அழைக்கிறான்.
கந்தூரிக்கு விழாவிற்கு கூப்பிட்டு சென்ற போது, யானையை கூட நாயென்றே சொல்கிறான்.
எத்தனை முறை திருத்தி சொன்னாலும் அத்தனை முறையும் அதையே சொல்கிறான்.
கொஞ்சம் கோபமாகவும் அதீத மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஒரு கட்டத்திற்க்கு மேல் அவனிடம் தோற்று விட்டேன்.
ஆம் நானும் அதை நாய் என்று ஒத்துக்கொண்டேன்.
இப்போது அவன் முன்பை விட உற்சாகமாய் "நாய்" "நாய்" என்று கத்தினான்.
அதை கேட்டதும் அந்த யானை வாழ்க்கையை வெறுத்து குலைத்து விட்டு சென்றதை போல உணர்ந்தேன்.
#மகனதிகாரம்