ஆசையே

ஆசையே...

தேவைகளின்
தேவை அதிகமாகும்போது,
தேடி வருகிறது
ஆபத்து..

நண்டுக்குத் தேவை
நல்ல வளை,
பொல்லாத ஆசைவந்து
போனால் புற்றுக்கு,
தானாய்க்
கிடைத்தது இரை-
பாம்புக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jan-18, 7:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aasaiye
பார்வை : 83

மேலே