மௌனமாக

கடற்கரை ஓரம்
விரலோடு விரல்
கோர்த்து

காலார நடக்கையில்
பின் தொடர்ந்த
நிழல்கள்

ரகசியமாய் சொன்னது
என் காதில்
விழுந்தது

உனக்கது கேட்டதோ
என்று உன்னை
கேட்கையில்

அலை வந்து கரை
தழுவி காத்திருந்த
பறவைக்கு

அதன் உணவை
காட்டிவிட்டு போனது
போல

விரல் இடுக்கில்
விரல் கோர்த்த
பற்றுதலை

அழுத்தி சொல்லாமால்
சொன்னாய் நீ
கேட்டதை

உண்மையா என்று
எனக்குள் உதித்த
கேள்வியை

கடலலையிடம் கேட்க
கடலலையும் பின்வாங்கியே
ஆமென்று ஆமோதித்து

மௌனமாக சொன்னது
சரியான ஜோடி
நீங்களென்று!
நா.சே..,

எழுதியவர் : Sekar N (18-Jan-18, 7:58 am)
Tanglish : mounamaaka
பார்வை : 120

மேலே