கவிஞன்,கவிதை
நான் கவிஞன்
நீ கவிதையடி
நான் எழுத எழுத
உன் எழில் வண்ணம்
வளர்ந்திடுமே வளரும்
தேன் நிலவு போல
உன்மீது எழும் என்
காதலெல்லாம் கவிதையாய்
உரு மாறிவிட -காலம்
உருமாற்றிடலாம் ஏன்
நம் அழிவைக்கூட தந்தாலும்
கவிதையாய் இருக்கும்
உன் எழிலும் அதில்
பரிமளிக்கும் நம் காதலும்
காலத்தாலும் அழிக்கமுடியாமல்
யுகம் யுகமாய் இருந்திடுமே
கவிஞன் நான் , எந்தன்
கவிதையடி நீ