கோவணத்தைக் காணோம்
உதவி செய்வாரென
பதவி தந்தோம்
உதறி போவாரென
கனவா கண்டோம்
சிங்கங்களின் அரியணையில்
சிறுநரிகளின் ஓலம்
அன்னத்தின் தாமரையில்
காக்கைகளின் கர்ஜனை
கட்டபொம்மன் மண்ணா
யோசிக்கிறேன் நானும்
கொஞ்சநேரம் கண்ணசந்தோம்
கோவணத்தைக் காணோம்
ஆகாயத்தில் பறக்குது
அதிகாரிகள் விமானம்
விமானம்போல நிவாரணமாக
ஏமாந்துதான் போனோம்
காசுவாங்கிட வேசியும்
இன்பம் காண்பாள்
காசுவாங்கிய மானிடா
நீ என்ன கண்டாய்....
இவண்
விமுகா