திட்டாமலே
தடுக்கி விழுந்தேன்...
கல்லை திட்டினாய்...!
வியர்வையோடு வந்தேன் ...
வெயிலை திட்டினாய் ...!
உடல் நோவென்றேன்...
காய்ச்சலை திட்டினாய் ...!
கஷ்டமாய் இருக்கிறதென்றேன் ...
கடவுளையே திட்டினாய்...!
என்ன செய்தால் அம்மா ...
என்னை திட்டுவாய் என்றேன் ...!
விரல் பிடித்து ...
சிரித்து கொண்டாய் ...!
..................................
"திட்டாமலே..." ....!