சமுதாயமும் ஒருவனும்

அறிவிலும் குறை,
அறவழியிலும் குறை......
இதை ஏற்றது என் வாழ்க்கை???

ஆட்சியிலும் பிழை,
ஆழ்நிலையிலும் பிழை....
இதை மாற்ற மறுக்கிறது என் வாழ்க்கை???

இடுகாட்டிலும் நிற்ற நிலை,
இல்லத்திலும் இல்லா நிலை.....
இது தான் என நம்புகிறது என் வாழ்க்கை???

ஈன்றவரால் அன்று கொதித்த உலை,
ஈன்றதால் இன்று கொதிக்கும் உலை....
இத்துடன் என் வாழ்க்கை???


உணர்ச்சியை கொண்றேன்,
உணர்வில்லா இச்சமுதாயத்தால்...

ஊர்களை (நாடு) அழித்தேன்,
ஊதியமும் வேதியமும் ஏற்பட்டதால்...

என் மனிதத்தை இழந்தேன்,
எண் உருவில் வந்த பணத்தால்....

ஏன் என்று கேட்க மறந்தேன்,
ஏமாற்றத்துடன் விழிகளை இழந்ததால்...

ஐம்புலன்களையும் துலைத்தேன்,
ஐம்பூதங்களால் இல்லை ஐந்து கட்சிகளினால்....

ஒன்றில் ஆரம்பித்தேன்,
ஒருகணம் விழித்தேன் ஒன்றை இழந்ததால்...

ஓவராக நினைத்தேன்,
ஓவியனின் கையில் விழுந்த ஓட்டால்...

ஔவியம் இழந்தேன்,
ஔபிரகம் நான் ஓர் நிலையில் நின்றதால்.....

இப்படிக்கு,
நானும் ஒருவன்.

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 11:16 pm)
பார்வை : 693

மேலே