கள்ளவிழிப் பார்வை

கள்ளவிழிப்பை பார்வையால்
என் மனத்தைக் கவர்ந்த அவன்
என் காதலன்தான் என்று நான்
எண்ணி நெகிழ்ந்திருந்த போது-அந்த
சேதி வந்து என் காதில் விழுந்தது
என்னவன் இவனே என்று நான் எண்ணியவன்
அதே 'கள்ளவிழிப் பார்வையால்' பல
மங்கையர் மனத்தைக் கவர்ந்த 'கள்ளனே'
இன்று காவலர் பிடியில் சிக்கிவிட்ட கள்ளனென்று
எப்படியோ என் மனதை கவர்ந்தவன் இப்போது
அப்படியே கள்வனாய் ஓடிவிட்டான்
அவன் பிடியில் , அவன் வலையில் இந்த
மாடப் புறா தப்பியதே என்று எண்ணி
நெகிழ்ந்தேன் நானும் ...........................
'பார்வையெல்லாம் நல்ல பார்வை என்று
எண்ணி எமர்ந்திட கூடாது 'இதுதான்
இதில் நான் கற்ற பாடம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jan-18, 10:17 am)
பார்வை : 136

மேலே