எனக்கும் அவரை பிடிக்கும்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆண் மகனின் பாசத்தில் அப்பா
சட்டென கோபித்துக்கொள்ளும் அவர்க்கு
பட்டென மன்னிக்கவும் தெரியும்
அவரும் ஒரு சிறந்த நடிகர்தான் போலும்
என்னை வெறுப்பதுபோல் பேசும்போது
என்னையே பிடிக்காது என்பதுபோல் இருக்கும் அவர்
எனக்குப்பிடித்த எல்லாமறிந்துள்ளார்
வெளியே போய்விடுயென கத்தும் அவர்
என் வரவையே எதிர் பார்த்திருப்பார் சின்ன குழந்தையாய்
தெண்டச்சோறு என்று சொல்லும் அவரே
அவன் சாப்பிட்டானா என்று ஆரம்பிப்பார் தான் சாப்பிடும் போது
அவர் வேறுயாருமில்லை கருவில் சுமந்தவளின் உறவும்
எனக்கு உயிர்கொடுத்து நெஞ்சில் சுமக்கும் என் அப்பா
ஆண் மகனுக்கும் ரொம்ப பிடிக்கும் அப்பாவை
வெளியே சொல்வதில் காரணம் நானும் அவரின் நகல் அல்லவா