குடியரசு தினம்

ஆங்கிலேயர் ஆட்சியை மறுத்து இந்திய குடிகள் ஆட்சி செய்ய தொடங்கிய தினம் குடியரசு தினம்..

ஆனால் இன்று,
பள்ளிகளில் பேச்சுரிமை மறுக்கிறது,
கல்லூரியில் ஆளுரிமை மறுக்கிறது,
சமுதாயத்தில் சுய உரிமை மறுக்கிறது... இதில்,
குடியரசு தினம் கொண்டாடுகிறாம்
குடிகளை அழித்து நடத்தும் அரசின் ஆட்சியால்,
குடியரசு தினம் கொண்டாடுகிறாம்
பன்முகம் அழித்து நடத்தும் அரசின் ஆட்சியால்,

பட்டதாரி ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமலும்
படிப்பறிவில்லாத ஒரு அரசியல்வாதி நாடாள்வதும் நம் நாட்டில் தான்,
சுயமரியாதை கற்றுத்தர வழியில்லாமல்
சுயநலம் கற்றுக்கொடுக்கும் கல்வியும் நம் நாட்டில் தான்..

ஊமை கூட்டங்களாக வாழ்ந்து மடிந்தது போதும்,
குடிகளை காத்து உண்மையை நிலைநாட்டி சொல்வோம் குடியரசு தினம் என்று!!!

எழுவோம், பாரதம் காப்போம்

எழுதியவர் : அர்ஜூன் (26-Jan-18, 10:59 am)
Tanglish : kudiyarasu thinam
பார்வை : 80

மேலே