குடியரசு தினவிழா கவிதை

பாரத அன்னையைப் போற்றுவோம்!
பாரினில் உயர்ந்திட உழைப்போம்!
கல்வியில் மேன்மை அடைந்திடுவோம்!
கனிமவளத்தை பேணி காத்திடுவோம்!
நல்திட்டங்கள் வகுத்திடும் நேர்மையான
நல்ல தலைவர்கள் உருவாக்கிடுவோம்!
இளைஞர்கள் ஒன்றாய் இணைந்தே
இனியஇந்தியா ஒளிர்ந்திட வழிசெய்வோம்!
விளைவிக்கும் விவசாயிகளைக் காப்போம்!
விரைந்தே கொண்டாடுவோம் மகிழ்ந்தே!

--- கு. அசோகன்,

எழுதியவர் : கவிஞர் கு. அசோகன் (26-Jan-18, 8:45 pm)
பார்வை : 87

மேலே