புது சொர்க்கம்---அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் விருத்தம் :


தவமிருந் தீன்ற தமயனோ டிளையோர்
=====தடங்கைரே கைப்போன்றும்
கவட்டிலை மனத்தில் கசிந்திடும் நேசம்
=====கங்கையின் நீர்ப்போன்றும்
நவமெனச் சுடரும் நற்குணம் நிறைந்தும்
=====நவில்மொழி தேனீந்தும்
சிவந்தலர் கமலத் திருமுகம் தாய்க்குத்
=====தேவரின் மனைப்போன்றே...


வாய்ப்பாடு :

விளம் மா விளம் மா விளம் காய்

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 9:10 pm)
பார்வை : 193

மேலே