தமிழே

அழகிய அரும்பாவையே
தித்திக்கும் கரும்பே
தமிழே எங்கள் இன்னமுதே
கோழையும் தீரன் ஆவான்
உன்னை விரும்பி கற்றால்
அனைவரும் சிறுபிள்ளையாகுவோமே செந்தமிழின் பாடல்கள் கேட்டால்
கல்லும் கறைந்து போகுமே
மெய்யுருகும் இன்பத்தமிழில் இசை கேட்டால்
கல்லாதவனும் அறிவுடை யாவானே
தமிழ் இலக்கண இலக்கியம் கற்றால்
துன்பமும் இன்பமாகுமே உமது திருவருளாளே
தெய்வத் திருத்தமிழே
உம்மை போற்றி போற்றி வணங்கேனோ என் தாய் தமிழே !
வாழிய தமிழே வாழியவே

எழுதியவர் : பிரகதி (2-Feb-18, 11:19 pm)
Tanglish : thamizhe
பார்வை : 511

மேலே