காதல் - கனவு

" நான் உனக்காக உன்
அழகிற்கு காணிக்கையாய்
எழுதிய இந்த காதல் கவிதையின்
வரிகளில் உன்னுடன் உறவாடிவிட்டேனடி
ஆனால் நான், நீ என்னவள்தான் என்ற
உந்தன் சம்மதம் பெற்ற பிண்ணல்லவோ
இந்த காதல் கவிதை அதை வடித்தேன் ;
கவிதையில் இப்படி 'காமத்தீயில்'
' புண்பட்ட', என்னை மன்னிப்பாயா என்னவளே,
இல்லை 'காமுகன்'இவன் என்று ஒதிக்கிவிடுவாயா,
ஒன்றுமட்டும் உண்மையடி நம்பிடு என்னை,
உனக்காக நான் எழுதிய இந்த காதல் கவிதையில்
காமம் தோய்ந்த வரிகள் ஏதுமில்லையடி ,
பின் அந்த வரிகளை நான் புரட்டிப்பார்த்தது
உன்னை தொடாமல் தொடும் இன்பம் பெறவே
'காமத்துப்பால்' இதை தவறென்று சொல்லவில்லையே !
திருமணத்திற்குமுன்னே உன்னை என் இந்த
விரல்கூட தொட்டுவிடாதடி ............என்னவளே
ஆனாலும் மன்னித்துவிடு இந்த நான்
செய்யாமல் செய்த குற்றத்திற்கு ...................."

மேற்கண்ட கவிதை ஒரு கனா காட்சியில்
இடம்பெற்றது ..................உண்மை , இதோ
கீழே படியுங்கள்.....................

என்னவளை நினைத்து கற்பனை உலகிற்கு
சென்ற நான் கண்ட கனா இது .....................
விழித்துக்கொண்ட பின் இதை நான் உணர்ந்திட
எனக்கே சில நேரமாயிற்று...............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Feb-18, 9:57 am)
பார்வை : 77

மேலே