சாெல்லி விடு வெண்ணிலவே

இரவின் இராச்சியத்தில் இடறுகிறேன்
இமை மூடி தனிமையிலே
விண் மீன் ஒன்று இடம் மாறி விட்டது
கண்களை மறைத்து கடந்து
பாேனதைக் கண்டாயா
விழிகள் திறக்கும் நேரம்
எதிரே வேண்டும் ஓடி வரச்சாெல்லு
வெண் முகிலாேன் மூடாமல்
முந்தி நீ பிடித்து வா
சூரியன் எழுமுன் சீக்கிரம்
கூட்டி வா
இன்னும் வரவில்லை
சாெல்லி விடு வெண்ணிலவே

எழுதியவர் : அபி றாெஸ்னி (7-Feb-18, 7:23 am)
பார்வை : 119

மேலே