நந்தவனப் பூங்காற்று
கானக இருளில் தனியாய்
நான் அகப்பட்டு தவிக்கிறேன்
நீயில்லாத வெறும் தருணங்களில்,
என் நந்தவனமே எங்கு நீ சென்றாய் !
பொடி நடையாய் உடன் வந்து
உன் புன்னகைப் பூங்காற்றை
இங்கு அள்ளி வீசு !
உன் நினைவுகள் தரும்
வேக்காட்டால் வெந்து அவதிப்படும்
என்னுள்ளம் சிறிது ஆனந்தப் படட்டுமே !
ஆக்கம்
அஷ்ரப் அலி