தயவு செய்து எனை கொன்று விடு

தயவு செய்து எனை கொன்று விடு


அனைவருக்குமான
அதிகாலை பொழுது

எனக்கு மட்டும்
ஏக்கத்தோடு தான்

இன்றேனும் பார்ப்பாயா - இல்லை
எப்பொழுதும் போல் கடப்பாயா

காத்து கிடப்பதும்
காக்க வைத்து ரசிப்பதும்
எனக்கும் புதிதல்ல
உனக்கும் புதிதல்ல

பிரம்மன் செய்த தவறுகள் இரண்டு
அழகாய் நீயும்
அல்லல் படும் நானும்

எப்படி எல்லாம்
பார்த்து ரசிப்பாய்
எப்படி எல்லாம்
வெட்க படுவாய்

எப்படி எல்லாம்
வாரி அணைப்பாய்
எப்படி எல்லாம்
முத்தமிடுவாய்

போதும் போதுமென
கத்திய பிறகும்
மீண்டும் மீண்டுமென்
கண்ணம் கடிப்பாய்

நமக்காய் புது உலகம்
என்பாய்
ஆதாம் ஏவலாய் நாம்
என்பாய்

நூறு பிள்ளை
வேண்டுமென்பாய்
இறாவாமலே
இணைந்திருப்போம்
என்பாய்

மொத்த ஆசையும்
மொத்தமாய் கொட்டி
நிறைவேற்று என
ஆணையிடுவாய்

காமம் கடந்த
காதல் என்றால்
நாம்தான் உவமை
என்பாய்

இன்னும் எத்தனை எத்தனை
உரையாடல் கூட்டி
இரவின் நீளத்தை
நீட்டி செல்வாய்

மறைந்த ஆதவன்
உதிக்கும் வரையில்
இடவேளையின்றி
பேசி தீர்ப்பாய்

இத்தனை ஜாலம்
இரவெல்லாம் செய்து
கனவுகள் முழுக்க
வர்ணங்கள் புனைவாய்

என்ன செய்து
என்ன பயன்
என்றே நானும்
ஏங்கி தவிக்க

என்னை கடக்கும்
எல்லா நாளும்
எங்கோ பார்த்து
என்னை தவிர்ப்பாய்

பிரம்மன் இழைத்த
தவறுகள் இரண்டு
பேரழகில் நீயும்
பேராசையில் நானும்

பிரம்மன் இழைத்த
தவறை திருத்த
வரத்தை கேட்டு
நிற்கிறேன் உன்னிடம்

தயவு செய்து எனை கொன்றுவிடு

மரணம் கூட
நீண்ட உறக்கம் தான்

இனி கனவின் நீளம்
காலமெல்லாம் நீளும்
கனவில் வந்து
நாளும் வாழும்
நம் மூன்றாம் உலகம்
மகிழ்ச்சியில் நிறையும்

நீ கேட்ட
நூறு பிள்ளை
ஆதாம் ஏவால்
இராவமலே நீளும் வாழ்வு
எல்லாமே
நீ இட்ட ஆணைதான்

எல்லாம் நிகழ
உன் ஆணையை நிறைவேற்ற

தயவு செய்து எனை கொன்று விடு


ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (7-Feb-18, 12:36 pm)
பார்வை : 340

மேலே