கை பிடிக்க ஆசை

உன் கை பிடித்து கடற்கரை மணலில் நடக்க ஆசை
பேருந்து பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் உன் தோள் சாய ஆசை
முடிவில்லா சாலையில் உன்னுடன் பயணம் செய்ய ஆசை
நீ உண்ட மிச்சத்தை நான் உன்ன ஆசை
கொட்டும் மழையில் ஒற்றை குடையில் நாம் நடக்க ஆசை
யாரும் இல்ல ஆத்தங்கரையில் உன் மடி சாய ஆசை
உன் கனவுகள் என்னை தினமும் எழுப்ப ஆசை
உன் நினைவுகளுடனே கண் மூட ஆசை
எனக்குள் வரும் கண்ணீரை உன் விரல் துடைக்க ஆசை
என் கரத்தை நீ மட்டும் பிடிக்க ஆசை
காற்றுக்கு கூட இடைவெளி விடாமல் நீ என்னை கட்டி அணைக்க ஆசை
உதட்டு சாயம் இல்லாமை என் இதழ்களை நீ சிவக்க வைக்க ஆசை
தொலைபேசியில் நீ கொடுத்த முதல் முத்தத்தை போல் இன்னொரு முத்தம் பெற ஆசை....

எழுதியவர் : (9-Feb-18, 10:53 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : kai pidikka aasai
பார்வை : 1337

மேலே