முதல்காதல்

மார்கழி பனியில்
நனைந்து கொண்டு
சோம்பலை முறித்து
மெதுவாய்
ஆதவன் உதயமாகும்
வேளையில்!
சிட்டுக்குருவி
போல
கீச்சிட்டுக் கொண்டு
பட்டுப்பூச்சி
போல
உன் தலைகாட்டி
சாலைகளில்
வட்டமிடும்
பட்டாம்பூச்சியே!
உனை கண்ட
அந்த வேளையில்
என்னை அறியாமல்
எனக்குள் எட்டி பார்க்கிறது

முதல்காதல்!

எழுதியவர் : சுதாவி (9-Feb-18, 11:51 am)
பார்வை : 128

மேலே