பெண்மனசு
எனையென்ன செய்தாய் அன்பே
என்நெஞ்சில் வண்ணம் சூழுதையா
இனும் என்ன வேண்டும் என் அன்பே
இனிதாய் வாழ வாருமையா
அன்னம் என் நெஞ்சம் முழுதும்
உன் எண்ணம் ஒன்றே தோனுதையா
கன்னம் கனிய காத்திருக்கிறேன்
இக்கன்னிபெண்ணை பாருமையா
ஆனி மாதமே காதல் கொண்டேனே
ஆண்மகனே....
நீயதை உணரவில்லையா?
மார்கழி மாதமே களிந்த போதிலும்
உன் மார்பில் தவழும் நிலைகள்
இல்லையே ஏன்?
கள்வனே!!
உன் பாவை பாடுகிறேன்
திருப்பாவை பாடலை...
உன் செவிகளில் சிறுதேனும்
அது விழுகின்றதா?
நான் பாலை வனமாய்
மாய்ந்து போவதில்
பயனேதுமில்லை
உனக்கோ அது புரிகின்றதா?
ம்ம்ம்..
காலங்கள் கரைய கரைய
வாலிபங்கள் மறைந்திடலாம்
காயங்கள் படிய படியவே
காவியங்கள் உருவெடுக்கும்...
என் காதலும் காவியமாய்
உருவெடுக்கும்
அ.ஜீசஸ் பிரபாகரன்