மரணம் விற்பனைக்கு
மரணம் விற்பனைக்கு
யாரும் வரலாம்
காலை முதல்
இரவு வரை
எப்பொழுதும் வரலாம்
தடையின்றி கிடைக்கும்
தாமதமின்றியும் கிடைக்கும்
உழைத்து நீங்கள் சேர்த்த பணத்தை
உருவி எடுக்க
எப்பொழுதும்
தயார் நிலையில் நாங்கள்
உங்களுக்கு கூட இல்லாத இலக்கு
உண்டு எங்களுக்கு
ஒவ்வொரு நாளும்
மரணத்தை விற்க
வாருங்கள்
வந்து அதிகம் குடித்து குடித்து
எங்களை வாழ வையுங்கள்
சாலை விபத்து நடந்தால் என்ன
கற்பழிப்பு நடந்தால் என்ன
கொலை குற்றம் நடந்தால்
எங்களுக்கென்ன
எங்களுக்கு முக்கியம்
சாராய விற்பனையே
இலவசத்திற்கு
வாலாட்டும் மக்கள் இருக்கும் வரையில்
சாராயம் விற்றாலும்
நாங்கள் புனிதர்களே
இப்படிக்கு
டாஸ்மாக்
உரிமம் தமிழக அரசு
ந.சத்யா