அம்மா

கருப்பு விண்வெளியில்
சிறு தீபமான என்னை
பெரும் வெளிச்சமாய் மாற்ற
அயராது உழைத்த அன்பே...!

பத்து மாதமாய்
உன்னுயிரை உன்னதமாய் தந்து
நான் உருவாய் உருப்பெற
அயராது காத்த வள்ளலே...!

உன்னாலே நான்
பூமியில் தவழும் பொருட்டு
சிவப்பு கம்பளம் விரித்து
என்னை வரவேற்ற தெய்வமே...!

புனிதமான அன்பால்
என்னை வளர்த்து எடுத்து
விண்ணில் பறக்கும் பறவையாய்
என்னை செதுக்கிய சிற்பியே...!

தவறுகளை திருத்தி
தன்னலம் என்றும் இன்றி
எனக்காய் வாழும் உனக்கு
என்னுயிர் என்றும் அர்ப்பணம்...!

எழுதியவர் : அமிழ்தினி (13-Feb-18, 9:28 am)
Tanglish : amma
பார்வை : 1128

மேலே